ரெக்கே ப4ந்தி4லெத்
கா2ந்து3ர் ரெக்கே ப4ந்தே3ஸ்
க3க3ன மார்கு3ம் ஜாத்கோ !
வரா போகு3ர் ஹுட3த்கோ
ப4ரா ஆங்கு3 பஜெனா ?
உஜே போடும் துரி கி3ன்
உண்ட ஹோவாய் கி3 ?
அட்குல் கா2த்தெ பட்சீகெ3
அண்ட3 ஹோவாய் கி3 ?
அகாசும் தெலோரே மேகு3ர்
அஸிகி3ன் கெ2ள்வாய் கி3 ?
பர்ஷும் பிஜ்ஜே ப2ங்காக்
பா4ர் மெனி லலடு3 கி3 ?
க2ல்ல பொட்3ரே ரெக்கேக்
க2ள்ளி புஸோன் கி3 ' பர்வாஸ் ' ?
இதன் தமிழாக்கம் :
சிறகு கட்டினால்....
தோளில் சிறகு தைத்தேன்
வான வெளியில் செல்ல !
காற்றின் திசையில் பறக்க
ஆக வேண்டுமே இலேசாய் ?
பிறந்த வயிற்றில் நுழைந்து
சுருண்டு கொள்வேனோ ?
அரிசி உண்ணும் பறவையின்
அழகு முட்டை ஆவேனோ ?
மிதக்கும் அந்த மேகத்தில்
விளையாடிச் சிரிப்பேனோ ?
மழையில் நனைந்த இறகை
உதிர்ப்பேன் பாரம் என்றே....
விழுந்த அந்த இறகினை
கேட்பாரோ ' அறிமுகம் ' கூறென்று ?
மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல்! இரண்டு முறை மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்.
ReplyDeleteஅகாஸு மார்கும் என்று நான் சொல்லியிருப்பேன்; க3க3ன மார்கும் என்றது மிகவும் அருமை.
ஹவ்லோ என்று சொல்லியிருப்பேன். ப4ரா என்பது புதிய சொல் எனக்கு.
பொவ்ஸ் என்பது தெரியும்; பர்ஸ் என்பது புதிய சொல் - வர்ஷம் என்ற சமஸ்கிருத சொல்லை ஒத்த சொல் போல் தொனிக்கிறது; சரி தானா?
பர்வாஸ் = அறிமுகம். இதுவும் புதிய சொல். பல சொற்களையும் கற்றேன். மிக்க மகிழ்ச்சி.
ககன = என்பது அதிகம் உபயோகத்தில் இல்லை எனினும் கவிதை நயத்திற்காக.
ReplyDeleteபரோ என்பது கூடு என்ற பொருளில். மதுரையில் உடல் நலம் சீராகி விட்டால் இந்த வார்த்தை கூறுவர்.
பொவ்ஸ் என்பது சேலத்தில் உபயோகத்தில் இல்லை எனினும், (சுநுக் உண்டு) நீங்கள் கூறுவது சரி.
பர்வாஸ் என்பது மதுரையில் பௌலாஸ் என்று உச்சரிப்பு மாற்றம் கொண்டுள்ளது.
ஹட்3கா3 ப4ரொ என்ற வார்த்தை சேலத்தில் எலும்புக் கூடு என்ற பொருளில் உபயோகத்தில் உண்டு.
ReplyDelete